சிவகங்கை கப்பல் போக்குவரத்து
இந்நிலையில் சிவகங்கை கப்பல் போக்குவரத்துக்கு தயாரான நிலையில், இந்தியா, இலங்கை இடையிலான கப்பல் சேவை மீண்டும் இன்று துவங்கும் என கப்பலை இயக்கும் நிறுவனம் அறிவித்தது.
3 மாதங்களுக்குப் பின் நாகையில் இருந்து காங்கேஷன்துறைக்கு கப்பல் சேவை மீண்டும் துவங்கியதால், இந்திய-இலங்கை இருநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேலும், இந்த கப்பலானது இன்று பி.ப 1.30 மணிக்கு மீண்டும் காங்கேசன்துறையில் இருந்து நாகபட்டினம் நோக்கி பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.
அத்துடன் இந்த கப்பல் சேவையானது செவ்வாய் தவிர்ந்த ஏனைய அனைத்து நாட்களும் இடம்பெறும் என கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



















